எரிபொருள் சந்தையில் அதிரடி மாற்றம் ; திடீர் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?
ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் 10 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்ததை அடுத்து, உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதன்படி, சர்வதேச சந்தையில் பிரெண்ட் (Brent) வகை மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 1.5 சதவீதத்தால் குறைந்து 93.07 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

அதேபோல், டப்ளியூ.டி.ஐ (WTI) வகை மசகு எண்ணெய் விலை 1.8 சதவீதத்தால் சரிவடைந்து 106.12 அமெரிக்க டொலர்களாகக் காணப்படுகிறது.
மத்திய கிழக்கில் போர் ஆரம்பமான காலப்பகுதியிலிருந்து இதுவரையான காலப்பகுதியில், பிரெண்ட் வகை மசகு எண்ணெய் விலை 50 சதவீதத்தினாலும், டப்ளியூ.டி.ஐ வகை மசகு எண்ணெய் விலை 40 சதவீதத்தினாலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
நேற்றைய தினம் நிலவிய கடும் விலை உயர்வுக்கு மத்தியில், அமெரிக்காவின் இந்தத் தீர்மானம் எரிபொருள் சந்தையில் ஒரு சிறிய தற்காலிக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.