ஆன்லைன் லாட்டரியில் ஜாக்பாட் பரிசு வென்ற முதியவர்!
அமெரிக்காவில் மிக்சிகன் நகரை சேர்ந்த 67 வயதான முதியவர் ஒருவருக்கு ஆன்லைன் லாட்டரியில் ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளது.
அவர் தனக்கு வந்த இ-மெயிலை மோசடி என நிராகரித்த நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் தொடர்பு கொண்டு பேசிய பிறகு தான் பரிசு விழுந்ததை அவர் நம்பி உள்ளார்.
4 லட்சம் டாலர் பரிசுத்தொகை
மிக்சிகன் - கலமாசு கவுண்டி பகுதியை சேர்ந்த ஒருவர் ஆன்லைன் கேமின் செயல்பாடுகள் மூலம் மிக்சிகன் லாட்டரியில் விளையாடி உள்ளார்.
அதில் 2 ரவுண்டுகள் வெற்றிகளை குவித்த அவருக்கு பரிசு வென்றது பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் வந்துள்ளது. எனினும் அவர் முதலில் அதை ஒரு மோசடி என்று நிராகரித்தார்.
பின்னர் அந்த இ-மெயிலின் நம்பகத்தன்மையை சரிபார்ப்பதற்காக மிக்சிகன் லாட்டரி நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது அவருக்கு லாட்டரியில் சுமார் 4 லட்சம் டாலர் பரிசுத்தொகை வென்றதை அறிந்து உற்சாகத்தில் அவர் கூறுகையில்,
நான் ஆன்லைனில் நிறைய கேம்களை விளையாடுகிறேன். ஆனால் சில கேம்கள் விளையாடும் போது 2-வது வாய்ப்புக்கான உள்ளீடுகளை பெறுவது பற்றி எனக்கு தெரியாது.
இந்நிலையில் மிக்சிகன் லாட்டரியில் இருந்து இரண்டாவது பரிசாக 4 லட்சத்து 16 ஆயிரத்து 322 டாலர் பரிசை வென்றதாக ஒரு மின்னஞ்சலை பார்த்தேன். முதலில் அதை மோசடி என நினைத்தேன்.
பின்னர் மிக்சிகன் லாட்டரியை அழைத்த போது பரிசு வென்றதை உறுதி செய்தேன். இந்த பணத்தை எனது குடும்பத்தினருக்காக செலவு செய்யவும், சேமிக்கவும் திட்டமிட்டுள்ளேன் என கூறியுள்ளார் அவர்.