யார் இந்த ரஷ்ய oligarch? வெளிவரும் முழு பின்னணி
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை அடுத்து விளாடிமிர் புடினுக்கு ஆதரவான oligarch மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது.
இதில், பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் கனடா நாடுகள் பல எண்ணிக்கையிலான oligarch மற்றும் ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் தடைகளை விதித்துள்ளன.
இந்த oligarch என்பவர்கள் ரஷ்யாவில் தொழில் செய்யும் பெரும் செல்வந்தர்கள் மட்டுமின்றி அரசியல் செல்வாக்கும் கொண்டவர்கள் ஆவார்கள். ரஷ்யாவில் பெரும்பாலான oligarch அனைவரும் ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் மிக நெருக்கம் கொண்டவர்களாக உள்ளனர்.
பில்லியன் கணக்கான டொலர் சொத்துக்கள், உயர் ரக ஆடம்பர படகுகள், விலை உயர்ந்த கார்கள் மற்றும் சட்டவிரோத முதலீடுகளிலும் இந்த oligarch ஈடுபட்டு வருகின்றனர்.
ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தால், அவர்கள் பாதுகாப்பாக தங்கள் தொழில்களை முன்னெடுக்கலாம், புடினை பகைத்துக் கொண்டால் மொத்தமும் இழக்கும் நிலைக்கு இந்த oligarch தள்ளப்படலாம் என்ற நிலையே ரஷ்யாவில் உள்ளது.
சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னரே பெரும்பாலான oligarch மலைபோல சொத்துக்களை குவித்ததாக ஊழலுக்கு எதிரான அமைப்பு ஒன்று தங்கள் விசாரணையில் கண்டறிந்துள்ளது.
அரசாங்க சொத்துக்களான இயற்கை எரிவாயு, எண்ணெய் உற்பத்தி, இயற்கை வளங்கள், வேளாண் உட்பட அனைத்தும் சொற்பமான தொகைக்கு அரசிடம் இருந்து கைப்பற்றி, அதில் இருந்து இவர்கள் பில்லியன் கணக்கான டொலர்களை வருவாயாக ஈட்டுகின்றனர்.
தங்களுக்கு தேவையானவற்றை முறைகேடாக பெறுவதுடன், சில வேளையில் வன்முறையும் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. பிரித்தானியா மட்டுமின்றி, கால்பந்து ரசுகர்கள் மத்தில் மிகவும் பிரபலமானவர் ரஷ்ய oligarch ரோமன் அப்ரமோவிக்.
செல்சி கால்பந்து அணியின் உரிமையாளரான இவரது மொத்த சொத்து மதிப்பு 10.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள். உலகிலேயே மிகப்பெரிய ஆடம்பர படகு ஒன்றும் இவருக்கு சொந்தமாக உள்ளது. 2010ல் சுமார் 400 மில்லியன் அமெரிக்க டொலருக்கு குறித்த படகை இவர் வாங்கியுள்ளார்.
மட்டுமின்றி, பிரித்தானியா உட்பட பல நாடுகளில் இவருக்கு சொத்து இருப்பதாகவே கூறப்படுகிறது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் பல ரஷ்ய oligarch கடும் பொருளாதார நெருக்கடிக்கு இலக்காகியுள்ளனர்.
தாம் தங்கியிருக்கும் ஹொட்டலுக்கு வாடகை கட்டணம் செலுத்த முடியவில்லை என ஒரு ரஷ்ய oligarch புலம்பியது சர்வதேச ஊடகங்களில் வெளியானது.
மேலும், உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி oligarch ரோமன் அப்ரமோவிக் ரஷ்ய உளவாளிகளால் விஷம் அளிக்கப்பட்டு கொலை முயற்சிக்கு இலக்கானார் என்பது குறிப்பிடத்தக்கது.