டொரண்டோ மேயர் தலைமையிலான பிரதிநிதிகள் குழு இங்கிலாந்து விஜயம்
டொரண்டோ நகரின் மேயர் ஒலிவியா சவ் பிரதிநிதிகள் குழுவொன்றுடன் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளார்.
தனது நகரத்திற்கு தொழில்துறை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இந்த இரண்டு நாடுகளுக்குமான முக்கிய வணிகப் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
இந்த பயணத்தில், டொரண்டோவின் திரைப்படத் துறை நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் அவருடன் இணைந்து கொண்டுள்ளனர்.
கனடிய படைப்புகள் அதிகளவில் வெளிநாட்டில் தயாரிக்கப்படுவதற்கு ஆதரவளிக்க, அயர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சிய தயாரிப்பு நிறுவனங்களுடனும், ஒளிபரப்பாளர்களுடனும் ஒப்பந்தங்களை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வரலாற்றில் இல்லாத அளவிற்கு பெரும் நிலைத்தன்மையற்ற சூழலில் வாழ்கிறோம். நம்பகமான வர்த்தக ஒத்துழைப்பாளர்கள் இப்போது மிகவும் தேவையாக உள்ளனர்,” என மேயர் சவ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகளினால் நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் நிலையில் இந்த விஜயம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், டப்ளின் மேயர் ரே மெக்அடம் மற்றும் லண்டன் மேயர் சர் சாதிக் கான் ஆகியோர்களுடன் இருதரப்பு சந்திப்புகளும் திட்டமிடப்பட்டுள்ளது.