உணவகத்தில் பணியாற்றும் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இளம் வீராங்கனை!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீன வீராங்கனை சோ யாக்கின் அப்பாவித்தனமான க்யூட் ரியாக்சன் கொடுத்து இணையத்தில் வைரலானர்.
18 வயதான சோ யாக்கின் சில வாரங்களுக்கு முன்பு ஒலிம்பிக் போடியத்தை அலங்கரித்த நிலையில், தற்போது நாடு திரும்பியுள்ளார்.
??? That cute Chinese gymnast, Zhou Yaqin, who learned the Olympic custom to bite medals after winning a silver one, returned home to work at the restaurant of her parents.
— Lord Bebo (@MyLordBebo) August 16, 2024
For marketing she serves food now in her Olympic uniform in the “Fat Brother”, Local Cuisine Restaurant… pic.twitter.com/RJ63RceWWT
ஒலிம்பிக் போட்டி முடிந்த கையோடு சோ யாக்கின், தன் பெற்றோர் நடத்தும் உணவகத்தில் அவர்களுக்கு உதவ துவங்கியுள்ளார்.
தனது சொந்த ஊரிலேயே இயங்கி வரும் சிறிய உணவகத்தில் சோ யாக்கின், உணவு பரிமாறி வருகிறார்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நிலையில், உணவகத்தில் சோ யாக்கின் உணவு பரிமாறும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.