கனடாவில் ஒரு வாகனம் இரண்டு தடவைகள் கொள்ளை
கனடாவின் வின்னிபெக் பகுதியில் ஒரே வாகனம் இரண்டு தடவைகள் கொள்ளையிடப்பட்டுள்ள.
செயின்ட் பால்ஸ் பகுதியில் சேர்ந்த பெண் ஒருவர் வாகன கொள்ளை தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது வாகனம் 3 வார கால இடைவெளியில் இரண்டு தடவைகள் கொள்ளையிடப்பட்டதாக அந்தப் பெண் தெரிவிக்கின்றார்.

எமிலியா நவுஸ்கீ என்ற பெண்ணின் வாகனமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மானிடோபா பல்கலைக்கழக மாணவர் வாகன தரிப்பிடத்தில் முதல் தடவை வாகனம் கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
களவாடப்பட்ட வாகனம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு களவாடப்பட்டு மீட்கப்பட்ட வாகனத்தில், வாகனம் களவாடப்பட்ட அதனை அடையாளம் காணும் கருவி ஒன்றை பொருத்தியுள்ளார்.
எவ்வாறெனினும், மூன்று வார கால இடைவெளியில் மீண்டும் வாகனம் களவாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கருவியின் உதவியுடன் முன்னதாக கார் களவாடப்பட்டு மீட்கப்பட்ட ஸ்டிலாவாட் பகுதியில் மீண்டும் இந்த வாகனத்தை கண்டுபிடித்ததாக குறித்த பெண் தெரிவிக்கின்றார்.
இந்த வாகனத்தில் மதுபானம் மற்றும் துப்பாக்கி தோட்டா களஞ்சியப்படுத்தும் பெட்டி ஒன்று என்பன காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வாகனங்கள் பல தடவைகள் கொள்ளையிடப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        