மற்றொரு முக்கியமான நாட்டில் பரவிய ஓமிக்ரோன் வைரஸ் தொற்று!
பிலிப்பைன்ஸில் முதன்முறையாக 2 பேருக்கு ஓமிக்ரோன் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உருமாறிய புதிய கொரோனாவான ஓமிக்ரோன் வைரஸ் தொற்று தற்போது அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. 77 நாடுகளில் அந்த வைரஸ் பரவி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது.
இந்நிலையில் Omicron வைரஸ், பிலிப்பைன்ஸ் நாட்டிலும் நுழைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அங்கு நைஜீரியாவுக்கும், ஜப்பானுக்கும் சென்று வந்த 2 பேருக்கு இந்த தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த இருவருக்கும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், 2 பேரில் ஒருவர் 2 கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர் என்றும் மற்றவர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர் என்றும் சுகாதாரத்துறை துணைச்செயலாளர் மரிய ரொசாரியோ வெர்ஜியர் கூறி உள்ளார்.
இதேவேளை, ஓமிக்ரோன தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும், விமானத்தில் பயணித்தவர்களையும் தேடிக்கண்டுபிடிக்கும் வேட்டையை பிலிப்பைன்ஸ் அரசு முடுக்கி விட்டுள்ளது.