உருமாறிய Omicron பரவல் கொரோனாவை விட இரட்டிப்பாக இருக்கும்! மருத்துவ வல்லுநர்கள் கணிப்பு
உருமாறிய omicron வைரஸ் டெல்டா மற்றும் பிளஸ்களை விட இரட்டிப்பாக இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முழுவதும் சுமார் 2 ஆண்டுகளாக கொரோனா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து omicron மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் புதிய உருமாறிய omicron பரவல் இதுவரை இருந்த வைரஸ்களை விட இரட்டிப்பு பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். இந்த வைரஸ் குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மருத்துவர் லான்செட் புதிய வகை Omicron வைரஸ் தடுப்பூசிகளை எதிர்கொள்ளுமா என்று ஆய்வு நடத்தினார். அதில், அவர் கூறியதாவது, கொரோனா 7 நாட்களில் இரட்டிப்பானது.அடுத்து வந்த டெல்டா வகை 5 நாட்களில் இரட்டிப்பானது.
ஆனால் தற்போது புதிதாக உள்ள இந்த வகை 2 நாட்களுக்குள் இரட்டிப்பாவதாகவும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் தடுப்பூசி செலுத்தி இருப்பவர்களுக்கு பாதிப்பு குறைவாக தான் இருக்கும்.
இதனால் பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க், தனி மனித இடைவெளி போன்றவற்றை கடைபிடியுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.