கனடாவில் பொலிஸ் அதிகாரியின் மோசமான செயல்
கனடாவின் தெற்கு ஜார்ஜியன் பே பொலிஸ் பிரிவைச் சேர்ந்த ஒரு பொலிஸ் அதிகாரி, பணியில் இருந்தபோது மது அருந்தி வாகனம் இயக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 15ம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து தங்களது படையணியில் உள்ள ஒரு உறுப்பினர் மது போதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பான விசாரணையை ஆரம்பித்தது.

விசாரணையின் முடிவில், 39 வயதுடைய ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபருக்கு எதிராக மது போதையில் வாகனம் இயக்கல், அதிகமான இரத்த மதுபான அளவுடன் வாகனம் இயக்கல் என இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சமூக பாதுகாப்பு மற்றும் காவல்துறைச் சட்டத்தின் கீழ், குற்றம் சாட்டப்பட்ட அந்த காவல் அதிகாரி ஊதியத்துடன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இந்த விவகாரம் குறித்து உள் விசாரணை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.