கனடாவில் பாடசாலைகளுக்கு மிரட்டல் விடுத்த சிறுமி நேர்ந்த கதி!
கனடாவில் பாடசாலைகளுக்கு மிரட்டல் விடுத்த சிறுமியொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
13 வயதான சிறுமியொருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் வின்னிபெக் பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இரண்டு பாடசாலைகள் மீது இந்த சிறுமி மூன்று அச்சுறுத்தல்கள் விடுத்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஹோக் பார்க் பாடசாலை மற்றும் இல்ம்வுட் உயர்நிலை பாடசாலை என்பனவற்றுக்கு இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குண்டுத் தாக்குதல் நடத்துவதாக இந்த சிறுமி அச்சுறுத்தல் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவின் ஏனைய சில பாடசாலைகளிலும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.