பிரிட்டிஷ் கொலம்பியாவில் பனிச்சரிவில் சிக்கி ஒருவர் பலி
கனடாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவின் பெர்னி (Fernie) அருகே ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஒரு ஸ்னோமொபைல் (snowmobile) ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
மாதேசன் கிரீக் பகுதியில் இரண்டு பேர் ஸ்னோமொபைலில் பயணம் செய்துகொண்டிருந்தனர்.
அப்போது ஒருவரால் சரிவான மலைப்பகுதியில் ஏறிச் செல்லும் போது பனிச்சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நபர் முழுமையாக பனியில் புதையுண்டதாகவும், அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பெர்னி தேடுதல் மற்றும் மீட்பு குழுவினருடன் இணைந்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால், அது மாலை நேரமாக இருந்ததாலும், அந்த பகுதி மிகுந்த அபாயம் வாய்ந்த பனிச்சரிவு மண்டலமாக அடையாளம் காணப்பட்டிருந்ததாலும், உடனடியாக தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை என கூறப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் பாதிக்கப்பட்ட நபரின் உடல் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவர் வானிலை மற்றும் செயல்பாட்டுக்கு ஏற்ற பாதுகாப்பு உபகரணங்களையும், பனிச்சரிவு பாதுகாப்பு சாதனங்களையும் அணிந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.