ஒன்டாரியோவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி
ஒன்டாரியோ மாகாணத்தின் அமரந்த் (Amaranth) பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இரண்டு எஸ்.யு.வீ வாகனங்கள் மோதி நிகழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
டஃபெரின் OPP (Ontario Provincial Police) வெளியிட்ட தகவலின்படி, இரு வாகனங்கள் மோதிய விபத்து கவுன்டி 10 மற்றும் கவுன்டி 12 சந்திப்புகளுக்கு அருகில் ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பில் விசாரணை
மேற்கு திசையில் பயணித்த ஹோண்டா SUV ஒன்று, கிழக்கு திசையில் வந்த டொயோட்டா SUV வாகனத்துடன் மோதியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஹோண்டா வாகனத்தின் சாரதி, கிராண்ட் வாலி (Grand Valley) பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஆண், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
டொயோட்டா வாகனத்தை ஓட்டிய 36 வயது பெண் கடுமையான காயங்களுடன் டொரொண்டோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அதே வாகனத்தில் இருந்த இரு சிறார்களும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் காய நிலை குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. விபத்து நடந்த பகுதி பல மணி நேரம் மூடப்பட்டு இருந்தது. தற்போது அந்த சாலை போக்குவரத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.