புதிய குடியேற்ற விதி ; இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட முதல் இந்தியர்
புதிய குடியேற்ற விதிகளின்படி இங்கிலாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக இந்தியர் ஒருவர் நாடுகடத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கிலாந்தின் புதிய குடியேற்ற விதிகளை கொண்ட ‘ஒன்-இன், ஒன்-அவுட்’ என்ற ஒப்பந்தம் ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வந்து உள்ளது.
ஒன்-இன், ஒன்-அவுட் ஒப்பந்தம்
இங்கிலாந்து-பிரான்ஸ் இடையே சமீபத்தில் ‘ஒன்-இன், ஒன்-அவுட்’ என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோர் பிரான்ஸ் வழியாக விரைவாக நாடு கடத்தப்படுகிறார்கள்.
புதிய குடியேற்ற விதிகளை கொண்ட இந்த ஒப்பந்தம் ஆகஸ்டு முதல் அமலுக்கு வந்து உள்ளது. இந்த நிலையில் இந்த புதிய சட்டவிதியின் கீழ், முதன்முதலாக ஒரு இந்தியர் சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் நுழைந்ததாக நாடுகடத்தப்பட்டு உள்ளார்.
பிரான்ஸ் சென்றடைந்த அவர் அங்கிருந்து இந்தியா அனுப்பப்பட உள்ளார்.கடந்த ஆண்டில் இங்கிலாந்தில் தங்குவதற்கு சட்டப்பூர்வ உரிமை இல்லாத 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை , 2,715 இந்தியர்கள் சட்ட மீறலின் கீழ் அங்கு தடுப்புக்காவலில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.