ஸ்காப்ரோவில் பாரிய தீ விபத்து சம்பவம்
கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் பாரிய தீ விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த தீ விபத்து சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சம்பவத்தில் மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
கிங்ஸ்டன் மற்றும் லோரன்ஸ் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள அடுக்கு மாடி குடியிருப்புத் தொகுதியில் இந்த விபத்து சம்பவம் பதிவாகி உள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுக் கொள்வதாக தீயணைப்பு படையினர் ட்விட்டர் பதிவு ஒன்றை இட்டுள்ளனர்.
இந்த தீபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார தெரிவிக்கின்றனர்