ஸ்காப்ரோவில் இடம் பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் காயம்
கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குடும்ப உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் ஒன்றின் விளைவாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து போலீசாருக்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வார்டன் மற்றும் டான்ஸ் ஃபோர்த் வீதிகளுக்கு அருகாமையில் இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவருக்கு உயிர் ஆபத்து கிடையாது என போலீசார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபருக்கும் கத்திக்குத்துக்கு இலக்கானவருக்கும் இடையிலான உறவு தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் டொரன்டோ போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.