கனடாவில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒருவர் பலி
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள கோர்டீஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட வீட்டு தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டர்ஹம் பொலிஸார் இந்த தகவலை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் இரவு சுமார் 10.30 மணியளவில் நாஷ் மற்றும் வர்கோ சாலைகள் அருகே இடம்பெற்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட தொடக்கநிலையில் மீட்பு குழுக்கள் வீட்டுக்குள் நுழைய முடியாமல் இருந்ததாகவும், அப்போது ஒருவர் வீட்டுக்குள் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

திங்கட்கிழமை காலை வெளியிடப்பட்ட புதுப்பிப்பு அறிக்கையில், வீட்டுக்குள் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளதாலும், சம்பவ இடம் இன்னும் பாதுகாப்பு கண்காணிப்பில் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தின் காரணம், குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.