கனடாவில் 64 வயது ஆசிரியரின் தகாத செயல்
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் கலிடான் பகுதியில் 64 வயதான ஆசிரியர் ஒருவர், மாணவர் ஒருவரை தகாத செயலுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஒன்றாறியோ மாகாண போலீசார் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

கடந்த 2002 ஆம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் 2022 ஆம் ஆண்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
64 வயதான டோனிக் க்ரீக் பகுதியைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு எதிராக இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 16 வயதிற்கும் குறைந்த பாடசாலை மாணவர் பாலியல் ரீதியாக துன்பப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த குற்றம் சுமத்தப்பட்ட ஆசிரியர் கடந்த ஜூன் மாதம் வரையில் ஆசிரியர் சேவையில் ஈடுபட்டிருந்தார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த பாடசாலை ஆசிரியர் கடந்த 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் இருந்தால் அறிவிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        