ஒன்றாரியோ மக்களுக்கு பணம் வழங்கும் அரசாங்கம்; எதற்கு தெரியுமா!
கனடாவின் ஒன்றாரியோ மாகாண மக்களுக்கு சமஷ்டி அரசாங்கம் பணம் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வாரத்தில் இவ்வாறு ஒன்றாரியோ மாகாண பிரஜைகளுக்கு காசோலைகள் மூலம் வழங்கப்பட உள்ளது.
காலநிலை செயல்திட்ட ஊக்கத்தொகை என்ற அடிப்படையில் இவ்வாறு கொடுப்பனவு தொகை வழங்கப்படுகின்றது.
கார்பன் பயன்பாட்டை குறைப்பதனை ஊக்குவிக்கும் நோக்கில் இவ்வாறு கொடுப்பனவு தொகை வழங்கப்படுகின்றது.
வருடாந்த அடிப்படையில் தனிப்பட்ட நபர்கள், வாழ்க்கைத்துணை, 19 வயதுக்கும் குறைந்த பிள்ளைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் இந்த ஊக்குவிப்பு தொகை வழங்கப்பட உள்ளது.
கிராமிய மக்களுக்கும் கூடுதல் ஊக்குவிப்புத் தொகை வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றாரியோ வாழ் அநேக மக்களுக்கு இவ்வாறு கொடுப்பனவ தொகை வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.