கனடாவின் முக்கிய மாகாணத்தில் இடைத்தேர்தல்
கனடாவின் பிரதான மாகாணங்களில் ஒன்றான ஒன்றாரியோ மாகாணத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் வாரத்தில் தேர்தல் தொடர்பில் முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்றாரியோ மாகாணத்தில் தேர்தல் நடத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறு எனினும் மகாண அரசாங்கம் முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி கனடா மீது வரி விதிப்பதாக அறிவித்துள்ள நிலையில் மக்களின் ஆணையை பெற்றுக் கொள்வதற்காக இந்த தேர்தலுக்கு செல்ல முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் திட்டமிட்டு உள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.