ஒன்றாரியோவில் சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளர்கள்
கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவுகளில் நோயாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தின் பல வைத்தியசாலைகளில் இந்த நிலைமையை அவதானிக்க முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் நோயாளர் எண்ணிக்கை 115 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே மிக அத்தியாவசியமான நிலைமைகளை தவிர வைத்தியசாலைகளில் அனுமதி பெற முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கட்டுப்படுத்தக் கூடிய நோய் நிலைமைகளின் போது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு உதவியை நாடுவதனை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.