30 வருடங்களுக்கு முன்னர் செலுத்த வேண்டிய சிறு தொகையினால் அனுமதிப்பத்திரம் ரத்தான சம்பவம்
டொராண்டோ மாநகராட்சி தற்போது தன் பழைய ஆவணங்களை எல்லாம் தோண்டித் துருவி, பல வருடங்களாகச் செலுத்தப்படாத பழைய பார்க்கிங் டிக்கெட்டுகளைத் தேடிக் கண்டுபிடித்து வருகிறது.
அப்படிச் சிக்கிய ஒரு 30 வருடப் பழைய பார்க்கிங் டிக்கெட்டால், ஒன்ராறியோவைச் சேர்ந்த ஒரு ஓட்டுநரின் அனுமதிப்பத்திரம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜார்ஜ்டவுன் அருகே உள்ள லைம்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த ஜெஃப் கிளென்டென்னிங் என்பவருக்கு அஞ்சலில் ஒரு கடிதம் வந்தது. அதில், "1996-ஆம் ஆண்டு செலுத்தப்படாத ஒரு பார்க்கிங் டிக்கெட்டுக்காக உங்கள் ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைப் பார்த்த ஜெஃப், யாரோ ஏமாற்றுகிறார்கள் என்றுதான் முதலில் நினைத்துள்ளார். 30 வருஷத்துக்கு முன்னர் நான் என்ன பண்ணிக்கிட்டு இருந்தேன்னே எனக்கு ஞாபகம் இல்லை. இதில் டிக்கெட் வேறா?" என்று வியந்தவர், அதிகாரிகளைத் தொடர்பு கொண்டபோதுதான் விஷயம் நிஜம் என்று தெரியவந்தது.
அன்று அவர் செலுத்த வேண்டியிருந்த அபராதத் தொகை வெறும் 32.75 டொலர்கள் மட்டும்தான்! அதில் ஒரு பகுதியை அவர் செலுத்தியிருந்தாலும், மீதித் தொகை நிலுவையில் இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
என்னை எச்சரித்து ஒரு கடிதம் கூட அனுப்பாமல், எடுத்தவுடனேயே அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்தது எனக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
'15 நாட்களுக்குள் பணத்தைக் கட்டுங்கள், இல்லையென்றால் லைசென்ஸ் ரத்தாகும்' என்று ஒரு நோட்டீஸ் கொடுத்திருக்கலாம்" என ஜெஃப் கவலை வெளியிட்டுள்ளார்.
விஷயம் இதோடு முடியவில்லை. நிலுவையில் இருந்த பார்க்கிங் அபராதத்தை ஜெஃப் உடனடியாகச் செலுத்தினார்.
ஆனால், ரத்து செய்யப்பட்ட லைசென்ஸை மீண்டும் பெறுவதற்கு அவர் கூடுதலாக 281 டொலர் செலுத்த வேண்டியிருந்தது! "இந்தக் கூடுதல் கட்டணம் மிகவும் அநியாயமானது.
இந்தத் தொகை ஒருவருடைய காரின் மாதத்தவணையாகவோ, சாப்பாட்டுச் செலவாகவோ அல்லது மருத்துவச் செலவாகவோ இருக்கலாம். அதை இப்படிப் பிடுங்குவது தவறு" என குற்றம் சுமத்தியுள்ளார்.