முகக் கவசம் தொடர்பில் ஒன்றாரியோ முதல்வர் வெளியிட்ட முக்கிய தகவல்!
முகக் கவசங்களை அணியும் நடைமுறை தற்போதைக்கு நீங்கக்கூடிய சாத்தியங்கள் கிடையாது என ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் (Doug Ford) தெரிவித்துள்ளார்.
இவ் விடயத்தை வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், முடக்கங்களை தொடர்ச்சியாக அமுல்படுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இயல்பு நிலையை கிரமமான அடிப்படையில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முகக் கவசங்கள் மக்களை பாதுகாத்து வருவதாகவும், தொடர்ச்சியாக அதனை பயன்படுத்த வேண்டிய அவசியமிருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கூடிய விரைவில் முகக் கவசம் அணியும் நடைமுறை தளர்த்தப்படும் சாத்தியமில்லை என டக் போர்ட் (Doug Ford) தெரிவித்துள்ளார்.