ஒன்ராறியோவில் அதிகரிக்கும் பாதிப்பு: ஒரே நாளில் 370 பேர்களுக்கு உறுதி
ஒன்ராறியோவில் கடந்த ஜூன் மாதத்திற் பின்னர் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒன்ராறியோவில் சனிக்கிழமை மட்டும் 378 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 9 பேர்கள் மரணமடைந்துள்ளனர்.
ஒன்ராறியோ மாகாணத்தில் ஜூன் 16 க்குப் பிறகு பதிவான புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் 340 பேர்கள் கொரோனா பாதிப்புக்கு இலக்கானதாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வியாழக்கிழமை 213 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, கடந்த ஒரு வாரத்தின் கொரோனா பாதிப்பு சராசரி 231 பேர்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்ராறியோ மாகாணத்தில் மட்டும் இதுவரை 9,401 பேர்கள் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
மருத்துவமனையில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 138 பேர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.