ஒன்றாரியோவில் இன்றுமுதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ள முக்கிய இடங்கள்!
ஒன்றாரியோவில் இன்று முதல், (31-01-2022) உணவகங்கள், மதுபான விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள் ஆகியன மீள திறக்கப்படுகின்றன.
ஓமிக்ரோன் பரவலை குறைக்கும் நோக்கில், கடந்த 5ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை, படிப்படியாக தளர்த்துவதன் ஒரு அங்கமாக, இம் மீள்திறப்புக்கள் இடம்பெறுகின்றன.
இவ்வாறு, உணவகங்கள், மதுபான விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள் ஆகியன, தமது கொள்ளளவின் 50 வீதத்துக்கு வாடிக்கையாளர்களை உள்ளகங்களில் அனுமதிக்க முடியும்.
சூதாட்ட மையங்கள், அருங்காட்சி சாலைகள், பேரங்காடிகள், விற்பனை நிலையங்கள், உள்ளக மத வழிபாட்டு சேவைகள் ஆகியனவும், 50 வீத கொள்ளளவில் இயங்கலாம்.
உள்ளகங்களில் ஒன்றுகூட அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஐந்திலிருந்து 10 ஆகவும், வெளிப்புறங்களில் 10இலிருந்து 25 ஆகவும் இன்றுமுதல் உயர்த்தப்படுகிறது.
அதேவேளை, பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி, மேலதிக கட்டுப்பாட்டு தளர்வுகளும், ஒண்டாரியோ அரசால் கொண்டுவரப்படவுள்ளன.