கனடிய அரசாங்கத்தின் வரி விதிப்பை எதிர்க்கும் 93 மூதாட்டி
கனடாவில் 93 வயதான மூதாட்டி ஒருவர் அரசாங்கத்தின் வரி விதிப்பு நடைமுறைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
மகள் மற்றும் பேரப்பிள்ளைக்கு வழங்கிய பரிசாக வழங்கிய காணிகள் மீது பெருந்தொகை வரி விதிக்கப்பட்டதாக விசனம் வெளியிட்டுள்ளார்.
லிஸ் டியாசுன் என்ற 93 வயதான மூதாட்டியே இவ்வாறு வரி விதப்பிற்கு அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
ஒன்றாரியோவின் வார்க்வோர்த் பகுதியில் பண்ணையொன்றில் இந்த மூதாட்டி கடந்த 58 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு சொத்துக்கள் மீதும் அரசாங்கம் 40000 டொலர்கள் வரி விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய வருமான முகவர் நிறுவனம் இந்த மூதாட்டிக்கு மூலதன வரி விதித்து கடிதம் அனுப்பி வைத்துள்ளது.
செல்வந்தர்கள் மீது வரி விதிப்பதாக கூறிய அரசாங்கம் தற்பொழுது தம்மீது வரி விதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தாம் ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான பின்னணியில் செல்வந்தர்கள் மீது அறவீடு செய்யப்படும் மூலதன வரியை தம்மீது விதித்துள்ளது நகைப்பிற்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
பரிசாக காணி உள்ளிட்ட சொத்துக்களை வழங்கினாலும் சந்தைப் பெறுமதியின் அடிப்படையில் வருமான வரி செலுத்தப்பட வேண்டுமென கனடிய வருமான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குடும்பத்திற்கு உதவும் நோக்கில் பரிசு வழங்கும் சொத்துக்கள் மீது வரி விதிப்பது நியாயமற்றது என குறித்த மூதாட்டி தெரிவித்துள்ளார்.