பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க நினைத்து கனடாவில் பெருந்தொகையை இழந்த இந்திய மாணவி
ஒன்ராறியோ மாணவி ஒருவர் தனது பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க நினைத்து விமான டிக்கெட் முன்பதிவு செய்த நிலையில் சிறிய தவறால் பெருந்தொகையை இழந்துள்ளார்.
இந்தியரான மந்தீப் கவுர் ரொறன்ரோவில் கல்வி பயின்று வருகிறார். இவரது பெற்றோர் விமான பயணம் மேற்கொண்டதில்லை என்பதால், அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க மந்தீப் கவுர் திட்டமிட்டுள்ளார்.

அதன்படி அவர்கள் இருவருக்கும் இந்தியாவில் இருந்து கனடாவுக்கான விமான டிக்கெட் முன்பதிவு செய்ய முடிவு செய்துள்ளார் மந்தீப் கவுர். இவர் திட்டமிட்ட நாட்களில் டிக்கெட்டும் இருந்துள்ளது. ஆனால் சிறு தவறால் அவருக்கு 4,000 டொலர் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 8ம் திகதி டிக்கெட் பதிவு செய்வதற்கு பதிலாக அவர் பிப்ரவரி 8ம் திகதி என பதிவு செய்துள்ளார். டிக்கெட் முன்பதிவு செய்த சில நொடிகளில் தமது தவறை உணர்ந்த மந்தீப் கவுர், உடனடியாக அந்த இணைய பக்கத்தை தொடர்பு கொண்டுள்ளார்.
ஆனார், இவர் முன்பதிவு செய்த டிக்கெட்டை பொறுத்தமட்டில் ரத்து செய்யவோ அதில் திருத்தம் செய்யவோ முடியாது என வாடிக்கையாளர் சேவையில் இருந்து தெரிவித்துள்ளனர்.
மந்தீப் கவுர் தமது பெற்றோருக்காக பிப்ரவரி 6ம் திகதி டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். தவறுதலாக அதே மாதம் 8ம் திகதி என குறிப்பிட்டுள்ளார். Air India நிறுவனத்தை பொறுத்தமட்டில் 7 நாட்களுக்கு முன்னர் முன்பதிவு செய்த டிக்கெட்டை, விமானம் புறப்படுவதற்கும் 24 மணி நேரம் முன்னர் ரத்து செய்யலாம், அந்த வகையில் கவுர் முன்பதிவு செய்த டிக்கெட் ரத்து செய்ய முடியாத சூழல்.

சிறிய ஒரு தவறால் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலைக்கு கவு தள்ளப்பட்டுள்ளார். இந்த 4,000 டொலர் தொகையை சேமிக்க, மீண்டும் பல மாதங்கள் ஆகலாம் எனவும், அந்த தொகை தமக்கு திருப்பிக் கிடைக்கவில்லை என்றால், தற்போதைய சூழலில் இரண்டு வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது எனவும் கவுர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கவுரின் நிலையை புரிந்து கொண்ட அந்த முன்பதிவு நிறுவனமானது 2,349 டொலர் தொகையை திருப்பி கொடுக்க முன்வந்துள்ளது. அல்லது 3,000 டொலருக்கான பயண சேவையை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் இந்த முடிவு கவுருக்கு நிம்மதியை அளித்துள்ளதுடன், தற்போது திட்டமிட்டபடி தமது பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.