ஒன்றாரியோவில் இந்த ஆண்டு வாகன விபத்துக்களில் இத்தனை மரணங்களா?
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் வாகன விபத்து சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களில் சாரதிகள் அவதானமாக வாகனத்தை செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரையில் ஒன்றாரியோ மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 268 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது கடந்த 2021 ஆம் ஆண்டு விடவும் 24 வீதம் அதிகமாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் வேகமாக வாகனத்தை செலுத்துவதனால் ஏற்பட்டுள்ளது.
69 மரணங்கள் வேகமாக வாகனத்தை செலுத்தியதனால் ஏற்பட்டதாகவும் கவனயீனமாக வாகனத்தை செலுத்தியதனால் 57 பேர் மரணித்துள்ளதாகவும் போதை பொருள் மற்றும் மது பயன்பாட்டினால் ஏற்பட்ட விபத்துகளில் 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட வார இறுதியில் நாட்களுக்காக பயணம் செய்யும் சாரதிகள் மிக அவதானத்துடன் வாகனத்தை செலுத்த வேண்டும் என அன்றாடியோ போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.