கனடாவில் இடம்பெறும் வாடகை மோசடி தொடர்பில் எச்சரிக்கை!
கனடாவில் இடம்பெற்று வரும் மோசடி சம்பவம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடா தின கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில் பலரும் சுற்றுலா விடுதிகளில் விடுமுறையை கழிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.
இணையத்தின் ஊடாக விடுதிகள் பதிவு செய்யும் போது பல்வேறு மோசடிகள் இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் விடுதிகளை வாடகைக்கு விடுவதாகக் கூறி விளம்பரம் செய்து இவ்வாறு மோசடிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றாரியோவைச் சேர்ந்த பெண் ஒருவர் முகநூல் விளம்பரம் ஒன்றின் அடிப்படையில் விடுதி ஒன்றை முன்பதிவு செய்த போது ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண்ணிடம் ஆயிரம் டொலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளது.
முற்பணமாக வைப்புச் செய்யப்பட் ஆயிரம் டொலர் பணத்தை இழந்து விட்டதாக ஒன்றாரியோவைச் சேர்ந்த ஹோமா அஷ்ராபோஃர் தெரிவித்துள்ளார்.