ஒன்றாரியோவில் மீட்கப்பட்ட சடலம் : விசாரணைகள் ஆரம்பம்
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள சவத்வெஸ்ட் ஆக்ஸ்போர்ட் பகுதியில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஒன்ராறியோ மாகாணக் காவல்துறையினர் தீவிர விசாரணைகளைத் ஆரம்பித்துள்ளனர்.
பிளாங்க் லைன் பகுதியில் ஒருவர் இறந்து கிடப்பதாகக் கிடைத்த அவசர அழைப்பையடுத்து, காலை சுமார் 11:20 மணியளவில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
அங்கு ஒரு நபர் இறந்து கிடப்பது உறுதி செய்யப்பட்டது. மரணம் அடைந்ததற்கான சூழ்நிலைகள் சந்தேகத்திற்கிடமானதாக இருப்பதால், இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

முதற்கட்டத் தகவல்களின் அடிப்படையில், இது ஒரு தனிப்பட்ட சம்பவம் எனவும், இதன் மூலம் பொதுமக்களுக்குப் பரவலான அச்சுறுத்தல் எதுவும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் அப்பகுதியில் காவல்துறையினரின் நடமாட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.