Airbus A350 ரக விமானங்களை சோதிக்க உத்தரவு!
Airbus A350 ரக விமானங்களைச் சோதிக்க ஐரோப்பிய ஒன்றியம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றிய உத்தரவு, செயல்பாட்டில் உள்ள A350 ரக விமானங்களின் ஒரு பகுதிக்குப் பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Cathay Pacific நிறுவனத்தின் விமானம் ஒன்றில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒன்றியத்தின் விமானப்போக்குவரத்துப் பாதுகாப்பு அமைப்பு அந்த உத்தரவைப் பிறப்பித்தது.
Cathay Pacific A350 ரக விமானங்களில் இயந்திரங்களைத் தயாரிக்கும் Rolls-Royce முன்னெச்சரிக்கையாக இயந்திரச் சோதனை ஒன்றை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறியுள்ளது.
அதேவேளை சோதனைகளை நடத்தும் உத்தரவு, A350 ரக விமானங்களைப் பயன்படுத்தும் ஐரோப்பிய நிறுவனங்களுக்கு மட்டும் பொருந்தும் என்று அமைப்பு குறிப்பிட்டது.