பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 27 பேர் கைது
பல குற்ற்ச செயல்களுடன் தொடர்புடைய 27 பேரை ஒன்றாரியோ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திட்டமிட்ட அடிப்படையில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் துப்பாக்கி வன்முறைகளில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு மாத காலமாக மாகாணம் முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 26 கிலோ கிராம் எடையுடைய கொக்கேய்ன், 1.5 கிலோ கிராம் பென்டனைல், 6 கிலோ கிராம் கிறிஸ்டல் மெதபட்டமைன், கஞ்சா போதைப் பொருள், போதை மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
370,000 டொலர் பெறுமதியான நாணயத் தாள்கள், 150,000 டொலர் பெறுமதியான தங்க ஆபரணங்கள், பத்து வானங்களும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.