ரொறன்ரோவில் புத்தாண்டில் பிறந்த குழந்தைகள்
கனடாவின் டொரன்டோவில் புத்தாண்டு மலர்ந்ததும் பிறந்த குழந்தைகள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டு மலர்ந்து சில நொடிகளில் மிசிசாகா வைத்தியசாலையில் குழந்தை பிரசவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சாம்ப்ரியின் என்ற பெண் உசாவியா என்ற மகனை ஈன்றெடுத்துள்ளார். தாயும் சேயும் நலமாக உள்ளனர் என ட்ரில்லியன் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
தந்தை முகமடுடன் மூவரும் புகைப்படம் ஒன்றையும் எடுத்துக்கொண்டு வெளியிட்டுள்ளனர். புத்தாண்டு மலர்ந்து சில நிமிடங்களில் டொரன்டோவில் ஹார்பர் என்ற குழந்தை பிறந்துள்ளது.
கிறிஸ் மற்றும் மச்செலா தம்பதியினரின் இந்த குழந்தை 7 பவுண்டு எடை கொண்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.
ஒன்றாரியோவின் நியூ மார்க்கெட் பகுதியில் சவுத் லேக் மருத்துவமனையில் நள்ளிரவு 12: 55 மணிக்கு மற்றும் ஒரு குழந்தை பிறந்துள்ளது.
இந்த குழந்தைக்கு ஜாமீன் லைன் என பெயரிடப்பட்டதாகவும் அவரது தாய் சாரா நலமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெத்ரா கோவிந்தராசு - ரத்னகிரி ஆதியண்ணன் ஆகிய தம்பதிகளுக்கு ஆசுவா மருத்துவமனையில் அதிகாலை 1.56 மணிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
டர்ஹம் பிராந்தியத்தில் பிறந்த முதல் குழந்தை இது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகாலை 2.45 மணிக்கு வோகன் வைத்தியசாலையில் விஜயவார் மற்றும் டிரான்பிரிட் ஆகிய தம்பதியினருக்கு குழந்தை பிறந்துள்ளது.
பிரம்டனில் காலை 6.00 மணியளவில் ஹாவா சின்யன் மற்றும் அமாடு சானாஹ் ஆகியோருக்கு குழந்தை பிறந்துள்ளது.