ஒட்டாவாவில் கத்தி குத்து தாக்குதலில் இளைஞர் பலி
கனடாவின் ஒட்டாவா நகரின் ஆல்டா விஸ்டா (Alta Vista) பகுதியில் 21 வயது இளைஞர் ஒருவர் மீத கத்தி குத்துத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் குறித்த இளைஞா் கொல்லப்பட்டார் என ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவசர சேவை (paramedics) பணியாளர்களுக்கு காயமடைந்தவர் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் பணியாளர்கள் அந்த நபரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ஆனால் குறித்த இளைஞா் அங்கு உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது. போலீசார் உயிரிழந்தவரை ரபேல் அடெண்டே (Raphael Atende) என அடையாளம் கண்டுள்ளனர்.
இது இந்த ஆண்டு ஒட்டாவாவில் நிகழ்ந்த 15வது கொலைச் சம்பவம் இதுவனெ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அதே தெருவில் சில நாட்களுக்கு முன் நடந்த துப்பாக்கிச்சூடு விசாரணைக்கு பின் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.