புற்று நோயாளிகளுக்காக கனடிய வயோதிப பெண்ணின் நெகிழ்ச்சி செயல்
கனடாவின் ஒட்டாவா நகரத்தைச் சேர்ந்த ருத் ஷெவெல் (Ruth Shevel) என்ற பெண் புற்று நோயாளிகளுக்கு போர்வைகள் நெய்து வழங்கி வருகின்றார்.
புற்றுநோயால் சிகிச்சை பெறும் நோயாளிகள் தனிமையில் அல்ல என்பதை உணரச் செய்வதற்காக, கடந்த பத்து ஆண்டுகளாக போர்வைகள் நெய்து வழங்கி வருகிறார்.
அவர் அண்மையில் தனது 1,000வது போர்வையை முடித்து, ஒட்டாவா மருத்துவமனை பொது பிரிவு (Ottawa Hospital General Campus) புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
“என் கைகளால் செய்யப்பட்ட இந்த போர்வைகள் யாருக்காவது ஆறுதலாக இருப்பதாக தெரிந்தால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி,” என்று ருத் ஷெவெல் கூறினார்.
25 ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் தனது மகள் கெல்லி (Kelly)யை இழந்த பின்னர் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ருத் ஷெவெல் கடந்த ஆறு தசாப்தங்களாக தையல் மற்றும் நெய்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளார். தினமும் 8 முதல் 10 மணி நேரம் வரை போர்வைகள் நெய்வதில் செலவிடுகிறார்.