சுவிஸில் மீண்டும் அதிகரிக்க தொடங்கும் தொற்று பரவல்!
சுவிஸில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால், 2,629 பேர் பாதிக்கப்பட்டதோடு 1 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிஸில் இதுவரை மொத்தமாக 8 இலட்சத்து 44ஆயிரத்து 209 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 11ஆயிரத்து 108 பேர் மரணமடைந்துள்ளனர்.
சுவிஸில் தற்போதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 55ஆயிரத்து 355 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 168 பேரின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் 2ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது.
சுவிஸில் இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 7 இலட்சத்து 77ஆயிரத்து 746 ஆக அதிகரித்துள்ளது.