கனடாவில் நபர் ஒருவரிடமிருந்து 200க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் மீட்பு; பொலிஸார் திகைப்பு
கனடாவில் வாட்டர்லூ பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.
பிராந்திய போலீசார் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் இவ்வாறு பாரிய அளவில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமையன்று மோட்டார் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் நிறுத்தப்பட்ட வாகனம் ஒன்று தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இந்த ஆயுதம் தொடர்பான குற்றச்செயல் அம்பலமாகியுள்ளது.

நிறுத்திய வாகனத்தில் ஆயுதங்கள் காணப்படுவதை பொலிஸார் அவதானித்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பகுதியைச் சேர்ந்த 39 வயதான நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை கொண்டு சென்றார் எனவும் கவனயீனமாக வாகனத்தை செலுத்தினார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த வாகனத்தில் 17 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அதன் பின்னர் குறித்த நபரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது மேலும் 156 ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் அத்துடன் மற்றுமொரு இடத்தில் 60 ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        