நயகராவில் 4 நாட்களில் கைவிடப்பட்ட 76 பூனைகள் மீட்பு
கனடாவின் நயகரா பிராந்தியத்தில் நான்கு நாள் இடைவெளியில் கைவிடப்பட்ட சுமார் 76 பூணைகள் மீட்கப்பட்டுள்ளன.
அதிக எண்ணிக்கையிலான பூனைகள் இவ்வாறு கைவிடப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கைவிடப்படும் பூனைகளுக்கு அடைக்கலம் வழங்குவதில் கடும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆண்டின் இந்தப் பகுதியில் அதிகளவு பூனைகள் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பூனைக் குட்டிகளை வளர்க்க முடியவில்லை எனவும் அவற்றுக்கு நல்ல ஓர் இடத்தை தேடிக் கொடுக்குமாறும் எழுதி ஒருவர் சில பூனைக்குட்டிகளை விட்டுச் சென்றுள்ளார்.
நான்கு நாள் இடைவெளியில் பெரும் எண்ணிக்கையிலான பூனைகளை பராமரிப்பதும் அவற்றுக்கு புதிய இருப்பிடங்களை தேடுவதும் மிகவும் சவால் மிக்கது என பராமரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.