எஜமானர் கொல்லப்பட்டது தெரியாமல் விட்டுவிலகாத நாய்: உக்ரைனில் சோகம்
உக்ரைனின் கீவ் நகரில் ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்ட தனது ஏஜமானர் அருகே நாய் படுத்திருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 41 நாட்களாக தொடர்ந்து வருகிறது. மூன்று நாட்களில் தலைநகர் கீவ்வை கைப்பற்ற புறப்பட்ட ரஷ்ய துருப்புகள் கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது.
இருப்பினும், முக்கிய பகுதிகளில் ரஷ்ய துருப்புகள் கொடூர தாக்குதலை முன்னெடுத்துள்ளதுடன், காட்டுமிராண்டித்தனமாகவும் நடந்துகொண்டுள்ளது.
தலைநகர் கீவ் அருகே இர்பின், புச்சா ஆகிய பகுதிகளில் இருந்து ரஷ்ய படைகள் அண்மையில் வெளியேறின. இதையடுத்து அங்கு உக்ரைன் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் புச்சா நகர தெருக்களில் அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்ட நிலையில், உடல்கள் சிதறிக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதில் ரஷ்ய துருப்புகளால் கொல்லப்பட்ட தன் எஜமானர் உடலின் அருகே நாய் ஒன்று படுத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமது எஜமானர் கொல்லப்பட்டுள்ளது தெரியாமல், அந்த நாய் சடலத்தின் அருகாமையிலேயே படுத்தபடி இருந்துள்ளது சமூக ஊடக பக்கங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது.