பாகிஸ்தான் தலிபான்கள் 11 பேரை சுட்டு வீழ்த்திய ராணுவம்!
பாகிஸ்தான் தலிபான் என அழைக்கப்படும் தெஹ்ரீக் ஈ தலிபான் பாகிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்த 11 பேர் அந்நாட்டுப் படையினால் கொல்லப்பட்டுளளனர்.
பாகிஸ்தானின் தெற்கு வஸிரிஸ்தான் மாகாணத்தில் நடத்தப்பட்ட முற்றுகையில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போது பயங்கரவாத தாக்குதல்களை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கையாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தலிபான் இயக்கத்தின் தளபதிகளில் ஒருவரான ஹஸிபுல்லா மற்றும் தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபடவிருந்த இருவரும் கொல்லப்பட்டவர்களில் அடங்கியுள்ளனர் என பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, இரு வேறு நகரங்களில் பொலிஸால் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 5 பொலிஸார் காயமடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.