வெளிநாடொன்றில் பொதுக்கூட்டத்தின் போது குண்டுவெடிப்பு: 44 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 44 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் இன்றைய தினம் (30-07-2023) கைபர் பக்துன்வா மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பாகிஸ்தான் - கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஜமியத் உலமா - இ - இஸ்லாம் பசல் என்ற அரசியல் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அப்போது திடீரென குண்டு வெடித்ததில் இதில் கட்சியின் முக்கிய பிரமுகர் உள்பட சுமார் 44 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும்100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாவும், வரையில் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த குண்டு தாக்குதலில் பாகிஸ்தானின் பஜௌர் நகரில் அரசியல் கூட்டத்தை குறி வைத்து இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.