பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வான்: குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துவா மாகாணம் கொஷிஸ்டன் மாகாணத்தின் ஹொலை பலஸ் நகரில் இருந்து பிஷம் நகர் நோக்கி செல்லும் போது வான் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (27-06-2023) இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து வானில்10க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் இடம்பெற்றுள்ளது.
மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வான் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
அதிவேகமாக சென்றதே இந்த விபத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.