பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வான்: பரிதாபமாக உயிரிழந்த 7 பேர்!
பாகிஸ்தானில் உள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று திங்கட்கிழமை (28-03-2022) பாகிஸ்தான் - கைபர் பக்துவா மாகாணம் மர்டன் மாவட்டத்தில் இருந்து கால்கொட் நகர் நோக்கி வான் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த வானில் 20-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
வேன் உப்பர் டீர் மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது செங்குத்தான வளைவில் திரும்ப முயற்சித்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் வேன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து சம்பவத்தில் அந்த வேனில் பயணித்த 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும், இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.