கனடாவின் சட்பரி 3 பேர் மரணித்த சம்பவத்தின் பகீர் பின்னணி
கனடாவின் சட்பரியில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
விபத்துச் சம்பவமொன்றினால் மூன்று பேரும் உயிரிழந்திருக்கலாம் என முன்னதாக ஊகம் வெளியிடப்பட்டிருந்த்து.
எனினும், இந்த மரணங்களின் பின்னணியில் கொலை மற்றும் தற்கொலைச் சம்பவங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் 46 வதயான பிரயன் டெசொர் மியோக்ஸ், 43 வயதான ஜேனட் டொசொர்மியோக்ஸ் மற்றும் 17 வயதான ஆஸ்டன் டொசொர்மியோக்ஸ் ஆகியோரின் சடலங்கள் அவர்களது வீட்டிலிருந்து மீட்கப்பட்டது.
மரணத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை பிரேதப் பரிசோதனையின் பின்னர் சரியான தகவல்கள் வெளிளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் குடும்பத்தினருக்கு இரங்கல் வெளியிட்டுள்ளனர்.