கனடாவில் மாணவர்களின் சித்திரங்களை விற்க முயற்சித்த ஆசிரியர்
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் மாணவர்களின் சித்திரங்களை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய முயற்சித்த ஆசிரியர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியரிடம் நட்டஈடு கோரி பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
பாடசாலை மாணவர்களின் சித்திரங்களை அனுமதியின்றி இணையத்தில் விற்பனை செய்ய முயற்சித்தார் என ஆசிரியர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மொன்றியாலில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் கற்றும் மாணவர்களின் பெற்றோர் ஆசிரியரிடம் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
காப்புரிமைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியரின் இந்த மோசமான செயலுக்காக 1.5 மில்லியன் டொலர்கள் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
மாணவர்களின் சித்திரங்கள் பல்வேறு வழிகளில் இணையத்தில் விற்பனைக்காக பட்டியலிடப்பட்டதன் மூலம் புலமைச் சொத்து சட்டம் மீறப்பட்டுள்ளதாக பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
புலமைச் சொத்து சட்டம் மீறப்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் கலைப் படைப்புக்கள் அனுமதியின்றி இணையத்தில் விற்பனை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.