அமெரிக்காவை உலுக்கிய சம்பவம் ; பெண் குழந்தை மரணத்தில் கைதான பெற்றோர் ; அதிர்ச்சி கொடுத்த காரணம்
அமெரிக்காவின் ஒக்லஹோமா பகுதியில் தமது குடும்பத்தினரால் வளர்க்கப்பட்ட நான்கு நாய்களில் ஒன்றினால் தாக்கப்பட்டதில் 2 வயதுடைய பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஒக்லஹோமா நகர காவல்துறை திணைக்களத்துக்கு வந்த அழைப்புக்கமைய, சம்பவ இடத்துக்கு சென்ற அதிகாரிகளால், நாய் ஒன்றினால் கொடூரமாகத் தாக்கப்பட்ட லொக்லின் மெக்வயர் (Locklynn McGuire) என்ற 2 வயதுச் சிறுமி உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுவர்கள் மீதான குற்றப்பிரிவு மேற்கொண்ட விசாரணையில், குழந்தை அந்த நாயுடன் ஒரு அறையில் குறிப்பிடத்தக்க காலத்திற்கு அலட்சியமாக விடப்பட்டிருந்த பின்னரே அவர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவந்தது.
இந்த விசாரணைகளின் அடிப்படையில், குழந்தையின் தாயும் தந்தையும் நேற்று கொலைக் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில், தமது மூன்றாவது பிறந்த நாளுக்கு சில வாரங்களுக்கு முன்பு உயிரிழந்த குறித்த குழந்தையின் சடலம், இறுதி சடங்குகளுக்காக அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.