குழந்தையைக் கொலை செய்ய அனைவரையும் ஏமாற்றிய பெற்றோர்!
ஃபின்லே போடன் தங்கள் மகனைக் கொல்வதற்காக எல்லோரையும், ஏமாற்றிய விடயம் தற்போது அம்பலமாகியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஃபின்லே போடன் தங்களது குழந்தையை கொலை செய்தாக குற்றம் சுமத்தப்பட்டனர். அப்போது கொவிட் காலம் என்பதால் விசாரணைகள் தொலைப்பேசி வாயிலாக மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் அவர்கள் போதைபொருள் பாவனையாளர்களா என்பதை கண்டறிய சோதனைகள் நடத்தப்பட்டன. அதேநேரம் கொலை குற்றத்திற்காக பெற்றோர்கள் இருவரும் சிறை தண்டனையை பெற்றனர்.
இது குறித்து விசாணைகளை ஆரம்பித்த டெர்பிஷயர் காவல்துறை அதிகாரி “இந்த அளவிலான காயத்தை பார்த்ததில்லை எனக் கூறியிருக்கிறார். ஃபின்லே அவரது எலும்புகளில் 57 முறிவுகள், 71 காயங்கள் மற்றும் இரண்டு தீக்காயங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்பதியினர் குழந்தையை பராமரிப்பதை காட்டிலும் போதைப் பொருள் கொள்வனவிற்கு அதிகளவு பணம் செலவழிப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதேநேரம் கொவிட் காலம் என்பதால் ஃபின்லேவை சுகாதார சேவை உறுப்பினர்கள் பார்ப்பதற்கு அனுமதி வழங்காமல் காரணம் கூறியுள்ளனர். அதாவது ஃபின்லேவிற்கு கொவிட் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறி சுகாதார உறுப்பினர்கள் உள்ளே வர மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இவ்வாறாக அவர்கள் தங்கள் குடும்பத்தினரையும், சுற்றத்தாரையும் ஏமாற்றி வந்துள்ளது விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.