கடவுச்சீட்டுகள் செல்லுபடியாகும் காலம் ஒரு வருடத்தினால் நீடிப்பு
ஜூன் மாத இறுதியில் இருந்து காலாவதியாகும் அனைத்து கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலத்தை குடிவரவுத் திணைக்களம் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது.
நாட்டில் இ-பாஸ்போர்ட் திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் காரணமான ஜூன் 30 ஆம் திகதியுடன் பத்து வருடங்கள் நிறைவடைந்த பின்னர் காலாவதியாகும் கடவுச்சீட்டுக்கள் மேலும் ஒரு வருடத்திற்கு இலவசமாக நீடிக்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
இ-பாஸ்போர்ட் வசதி
புதிய எலக்ட்ரோனிக் சிப் கொண்ட இ-பாஸ்போர்ட் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் பொதுமக்களுக்கு வெளியிடப்படும்.
இதன் மூலம் மக்கள் புதிய பாஸ்போர்ட்டை இ-பாஸ்போர்ட்டாக மாற்ற முடியும்.
இதற்கமைய புதிய இ-பாஸ்போர்ட் அச்சிடுவதற்கு ஏலம் கேட்டு ஒரு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் மூத்த குடிவரவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு ஆண்டுக்கு சுமார் 7 இலட்சம் இ-பாஸ்போர்ட்களை வழங்கமுடியும் என திணைக்களம் நம்புவதாக அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |