கனடாவில் சிகிச்சைக்காக காத்திருந்து மற்றொரு நோயாளி மரணம்
கனடாவில் சிகிச்சைக்காக காத்திருந்து மற்றுமொரு நோயாளி உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
நியூ பிரவுன்ஸ்வீக் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைக்காக காத்திருந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நியூ பிரவுன்ஸ்விக்கின் மொன்க்டொன் பகுதியின் மொன்க்டொன் வைத்தியசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் குறித்த நபர் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர் ஒருவர் பரிசோதனை செய்வதற்காக குறித்த நோயாளி காத்திருக்க நேரிட்டுள்ளது.
ஏனைய மருத்துவ பணியாளர்கள் சில மருத்துவ உதவிகளை வழங்கியதுடன் சில பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் திடீரென நோய் நிலைமை உக்கிரமடைந்து குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நோயாளியின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. நியூ பிரவுன்ஸ்விக்கில் அவசர சிகிச்சைப் பிரிவில் காத்திருந்த நேரத்தில் மரணித்த இரண்டாவது சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
வைத்தியசாலைகளில் ஆளணி வளப்பற்றாக்குறை காரணமாக இவ்வாறான மரணங்கள் சம்பவிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.