பேச்சுவார்த்தையால் அமைதி திரும்பும்; பாகிஸ்தான் பிரதமர் நம்பிக்கை
ஈரான்–அமெரிக்கா மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முக்கிய முயற்சியாக, பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் நகரில் உயர் மட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் பாகிஸ்தான் சென்றுள்ளார்.

அவர், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்து, ஈரானுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகள் குறித்து விரிவாக கலந்துரையாடினார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்ற நிலையை குறைத்து, நீடித்த அமைதியை ஏற்படுத்தும் நோக்கில், இருநாட்டு பிரதிநிதிகளும் பாகிஸ்தானில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரு தரப்பினரும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான உறுதிப்பாட்டை பிரதமர் பாராட்டினார்.
இப்பேச்சுவார்த்தைகள் பிராந்தியத்தில் நிலையான அமைதியை உருவாக்கும் முக்கிய படியாக அமையும்” என ஷெபாஸ் ஷெரீப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தைகள், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்து வரும் பதற்ற நிலையை தணிக்கும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகின்றன.