டொராண்டோவில் இரு வாகனங்கள் மோதி பெண் பாதசாரி பலி
கனடாவின் ஸ்காப்ரோ Scarborough பகுதியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற இரு வாகன விபத்தில், 20-வயதுடைய ஒரு பெண் பாதசாரி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இரவு 9:30 மணியளவில் பிரிச்மவுன்ட் Birchmount வீதியும், சென் கிளயர் அவன்யூ St. Clair Avenue East-இலும் உள்ள சந்திப்பில் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு அவசர உதவிப் படைகள் விரைந்தனர். "அந்த பெண் பாதசாரி வீதியின் நடுப்பகுதியில் கடக்க முயன்றபோது, வடக்கே சென்ற வெண்மை நிற Ford வேன் மற்றும் தெற்கே வந்த கருப்பு நிற SUV வாகனமும் மோதிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தின் போது அருகில் இருந்த ஒரு பெண் டொராண்டோ தீயணைப்பு வீராங்கனை, உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், பின்னர் டொராண்டோ அவசர மருத்துவ உதவியாளர்கள் வந்ததும், பல முயற்சிகளுக்குப் பிறகும் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
இரண்டுமே வாகனங்கள் விபத்துக்குப் பிறகு தப்பிச் சென்றதாக காவல்துறை கூறியுள்ளது. Ford வேன்-க்கு முன்பக்க கண்ணாடி பகுதியில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.